2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

வரவு பதிவுசெய்யும் கருவி மூலம் கொரோனா பரவும் என அச்சம்

Niroshini   / 2020 நவம்பர் 02 , பி.ப. 01:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

யாழ்ப்பாணம் மாவட்டத்திலுள்ள அரச அலுவலகங்களில் உத்தியோகத்தர்களின் வரவைப் பதிவுசெய்வதற்கு, தற்போதும் கைவிரல் அடையாளம் பதிவுசெய்யும் கருவி பயன்படுத்தப்படுவது குறித்து உத்தியோகத்தர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் அதிகமாக பரவிவரும் நிலையில் இவ்வாறான கைவிரல் அடையாளம் பதிவுசெய்தல் தமக்கு பாதிப்பாக அமைகின்றது என்று, உத்தியோகத்தர்கள் தெரிவித்துள்ளனர்.
யாராவது ஓர் உத்தியோகத்தருக்கு கொரோனா தொற்று இருக்கும் பட்சத்தில் அது அனைவரையும் பாதிக்கும் எனவும் அவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

'கடந்த யுத்த காலத்தில்கூட எந்தவித அச்சமும் இன்றி நாம் பணியாற்றினோம். அப்போது வரவுப் பதிவேடு மாத்திரமே இருந்தது. நிர்வாக உத்தியோகத்தர்கள் காலை 9 மணிக்கும் மதியம் 12.30 மணிக்கும் சிவப்பு அடிக்கோடிடுவர். இதன்மூலம் நேர்த்தியாக வரவு பதிவுசெய்யப்பட்டது' எனவும் உத்தியோகத்தர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்படுத்தப்படும் வரை கைவிரல் அடையாளம் பதிவுசெய்யும் இயந்திரங்களை நிறுத்திவைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .