Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2024 நவம்பர் 14 , மு.ப. 09:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணத்தில் வாக்களிப்பு நிலையத்தில் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த 34 வயதுடைய சுபாஷ் எனும் பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாசாலையில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையத்தில் புதன்கிழமை (13) முதல் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த குறித்த நபர் வியாழக்கிழமை (14) காலை உயிரிழந்த நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார்.
அதனையடுத்து சடலத்தை மீட்ட கோப்பாய் பொலிஸார் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ் , போதனா வைத்தியசாலையில் சடலத்தை ஒப்படைத்துள்ளதுடன் , சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இச் சம்பவத்தினால் இன்றைய தினம் காலை குறித்த வாக்களிப்பு நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டதுடன் , பிறிதொரு பொலிஸ் உத்தியோகத்தர் கடமைக்கு அமர்த்தப்பட்டு , வாக்களிப்பு சுமூகமான முறையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
எம் . றொசாந்த்
9 minute ago
25 minute ago
38 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
25 minute ago
38 minute ago
49 minute ago