Freelancer / 2023 மே 30 , மு.ப. 10:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
சும்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சியில் இருந்து தருமபுரம் நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிளும் புதுகுடியிருப்பு பகுதியில் இருந்து கிளிநொச்சி நோக்கிப் பயணித்த பட்டா வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் இளம் குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து, நேற்று (29) மாலை 04 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
விபத்தில் இருவர் படுகாயம் அடைந்த நிலையில், கிளிநொச்சி வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போது, அதில் ஒருவரான
தருமபுரம் பகுதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான தியாகராசா சஞ்சீவன் (வயது 36) என்பவரே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மற்றைய நபர், கிளிநொச்சி வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றார்.
அதிக மது போதையில் பயணித்தமையாலேயே இவ்விபத்து இடம்பெற்றிருக்கலாமே பொலிஸார சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இந்த விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு, பிரேத பரிசோதனையின் பின்னர் சடலத்தை உறவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்த கிளிநொச்சி பொலிஸார், சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (N)
12 minute ago
13 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
13 minute ago
1 hours ago