2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

வீட்டு உரிமையாளர்களுக்கு ஆவா குழு கடிதம்

எம். றொசாந்த்   / 2019 மார்ச் 06 , பி.ப. 12:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழில். வீடுகளுக்கு முன்பாக உள்ள கண்காணிப்பு கமராக்களை அகற்றுமாறு ஆவா பிளஸ் குழுவின் பெயரில் வீட்டு உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பப்பட்டு உள்ளன.

குறித்த கடிதத்தில், “தங்கள் வீடுகளுக்கு முன்பாக உள்ள கமராக்களை தாமதிக்காமல் உடனே அகற்றவும், அல்லது வீதியை பார்க்காது உள்ளே பூட்டவும், நம் தோழர்கள் சிலர் மாட்டி இருக்கிறாங்க ஆகவே உடனடியாக மாத்தவும், இந்த எச்சரிக்கையை மீறினால் உங்கள் மீதும் தாக்குதல் விரைவாக நடத்தப்படும்” என குறிப்பிடப்பட்டு உள்ளது.

யாழில் நடைபெறும் வாள் வெட்டு சம்பவங்கள் தொடர்பான குற்றவாளிகளை பொலிஸார் சிசிரி கமரா ஆதாரங்களை கொண்டு கைது செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X