Freelancer / 2023 ஜூன் 17 , மு.ப. 12:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட முதியவர் வைத்தியசாலை நிர்வாகத்தின் அசட்டையீனம் காரணமாக உயிரிந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
அச்சுவேலி வடக்கைச் சேர்ந்த குழந்தை கணேஷ் என்ற நபர் நெஞ்சுவலி காரணமாக அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.
குறித்த நோயாளியை ஏற்றிச்சென்ற அம்பியூலன்ஸ் கோப்பாய் வரை சென்று மீண்டும் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலைக்கு திரும்பி வந்து அட்மிஷன் டிக்கெட்டை எடுத்து சென்றுள்ளனர்.
உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நோயாளியை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லும் பொழுது பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை பின்பற்ற தவறியதன் காரணமாக, நெஞ்சு வலியால் குறித்த முதியவர் உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.
வைத்தியசாலை நிர்வாகத்தின் அசட்டையீனமே இந்த உயிரிழப்புக்கு காரணம் என உறவினர்கள் வைத்தியசாலை நிர்வாகம் மீது குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். R
1 hours ago
2 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
6 hours ago