Janu / 2024 பெப்ரவரி 20 , மு.ப. 11:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழில் ஹெரோயின் போதைப் பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் நான்கு இளைஞர்கள் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்
ஹெரோயின் போதைப்பொருளை கொள்வனவு செய்து கொண்டு செல்வதாக கோப்பாய் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய கோண்டாவில் இருபாலை வீதிக்கு விரைந்த பொலிஸார் , 5 கிராம் 465 மில்லிகிராம் ஹெரோயினுடன் நான்கு இளைஞர்களை கைது செய்துள்ளனர்
இதேவேளை இவர்களிடம் இருந்து ஊசிகளையும் கைப்பற்றியுள்ளதுடன் குறித்த நால்வருக்கு எதிராக யாழ்ப்பபாணம் நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது
மேலும் இது தொடர்பிலான முதற்கட்ட விசாரணைகளின் போது குறித்த போதைப்பொருளை குருநகர் பகுதியில் இருந்து கொள்வனவு செய்துள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் .
நிதர்ஷன் வினோத்

10 minute ago
17 minute ago
2 hours ago
05 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
17 minute ago
2 hours ago
05 Nov 2025