2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

குறைகேள் அலுவலகம் திறப்பு

Niroshini   / 2017 மார்ச் 04 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஸன், எம்.றொசாந்த், எஸ்.ஜெகநாதன்

யாழ்ப்பணத்துக்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று சனிக்கிழமை வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில், “ஜனாதிபதியிடம் சொல்லுங்கள்” என்ற குறைகேள் அலுவலகத்தினை திறந்து வைத்தார்.

சனிக்கிழமை காலை 9.00 மணியளவில் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி, பலத்த பாதுகாப்புடனும் எதிர்ப்பின் மத்தியிலும் அலுவலகத்தினை திறந்து வைத்ததுடன், மாவிட்டபரம் நல்லிணக்கபுரத்தில் அமைக்கப்பட்ட வீட்டின் உரிமையாளர்களுக்கான திறப்புக்களையும் கையளித்தார்.

இந்த நிகழ்வில், அமைச்சர்களான துமிந்த திசாநாயக்க, அமைச்சர் மஹிந்த அமரசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.சுமந்திரன் உட்பட வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் சின்னத்துரை தவராசா, யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கன் வேதநாயகன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X