Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2017 மார்ச் 10 , மு.ப. 06:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.நிதர்ஸன்
இலங்கையிலுள்ள ஒன்பது மாகாண சபைகளின் முதலமைச்சர்களிலும் கல்வித் தரம் கூடிய முதலமைச்சர் யார் என்பது உங்களுக்கு நன்குத் தெரியும். ஆனால் அவரது நிர்வாகத்தை விடவும் எட்டாம் வகுப்பு மட்டுமே படித்த வடமேல் மாகாண முதலமைச்சரின் நிர்வாகம் சிறந்ததாக இருப்பதாக, வட மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்துள்ளார்.
மாகாண சபையில், வியாழக்கிழமை (09) இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
இலங்கையில் ஒன்பது மாகாணங்கள் இருக்கின்றன. அந்ததந்த மாகாணங்களின் முதலமைச்சர்களுடன் ஒப்பிடுகின்றபோது கல்வித் தரம் அதிகமாக இருக்கின்ற முதலமைச்சர் யார் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். ஆனால், கல்லித் தரத்துடன் ஆளுமையும் இருக்க வேண்டியது அவசியம்.
இவ்வாறானதொரு நிலையில், வடமேல் மாகாண முதலமைச்சரைச் சந்தித்துக் கலந்துரையாடியிருக்கிறேன். அவர் தரம் எட்டு வரையுமே கற்றிருக்கின்றார். ஆனால், அவர் தனது நிர்வாகத்தை சிறந்தமுறையில் நடத்தி வருகின்றார். அதற்கான ஆளுமை அவரிடம் இருக்கிறது. ஆகவே, நிர்வாகத்தை சிறந்த முறையில் நடத்துவதற்கு அறிவுடன் கூடிய ஆளுமை அவசியம்' என்றார்.
6 hours ago
16 Aug 2025
16 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
16 Aug 2025
16 Aug 2025