2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

இலங்கை மீனவர்கள் 15 பேர் விடுவிப்பு

Menaka Mookandi   / 2014 ஒக்டோபர் 30 , மு.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-யோ.வித்தியா

இந்திய கடற்படையினரால் கைது செய்யப்பட்டு இந்திய சிறையில் தடுத்து வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட மாதளையை சேர்ந்த 15 மீனவர்களையும் இலங்கை கடற்படையினரிடமிருந்து இன்று வியாழக்கிழமை (30) பொறுப்பேற்றுக் கொண்டுள்ளதாக யாழ்;. கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள பிரதிப் பணிப்பாளர் நடராசா கணேசமூர்த்தி தெரிவித்தார்.

விடுவிக்கப்பட்ட இந்த இலங்கை மீனவர்கள் இந்திய கடற்படையினரால் இலங்கை கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

தொடர்ந்து, அந்த மீனவர்களை காங்கேசன்துறை துறைமுகத்தில் வைத்து பொறுப்பேற்றுக்கொண்டதுடன், மீனவர்களை அவர்களின் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக பிரதிப்பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

இந்திய கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடித்தார்கள் என்ற குற்றச்சாட்டிலே மேற்படி மீனவர்கள் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .