2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

வடமாகாண மதுவரி திணைக்களத்துக்கு 29பேர் இணைப்பு

Menaka Mookandi   / 2014 நவம்பர் 06 , மு.ப. 08:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நா.நவரத்தினராசா


மதுவரித் திணைக்களத்தின் வட மாகாண அலுவலகங்களில் கடமையாற்றுவதற்காக 29 புதிய உத்தியோகஸ்தர்கள் நியமிக்கப்ப்டுள்ளனர். இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் அரியாலை, புங்கன்குளம் சனசமூக நிலைய மைதானத்தில் வைத்து வியாழக்கிழமை (06) வழங்கப்பட்டன.

மதுவரித் திணைக்களத்தின் 3 பெண் பாதுகாவலர், 18 ஆண் பாதுகாவலர் மற்றும் 8 மதுவரி பரிசோதகர்கள் ஆகியோருக்கான நியமனங்களே வழங்கப்பட்டன.

இவர்கள் தங்கள் பயிற்சிகளை முடித்து அணிவகுப்பு மரியாதையை மதுவரி திணைக்கள ஆணையாளர் வசந்த ஹப்புஆராய்ச்சிக்கு செலுத்தி தங்கள் பதவிகளை பொறுப்பேற்றுக்கொண்டனர்.

அத்துடன், பயிற்சியின் போது சிறந்த திறன்களை வெளிப்படுத்திய அலுவலர்களிற்கான வெற்றிக்கேடயங்களும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில், மதுவரி திணைக்கள ஆணையாளர் வசந்த ஹப்புஆராய்ச்சி, மதுவரித் திணைக்கள மல்லவ குற்றப்பிரிவு ஆணையாளர் என்.விதானகே, பிரதி ஆணையாளர் வசந்த சமரகே, யாழ். மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .