2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் 70ஆவது ஆண்டு விழா

Kogilavani   / 2013 ஜூலை 07 , மு.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


நா.நவரத்தினராசா

இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் 70ஆவது ஆண்டு விழா யாழ்ப்பாணம் பலநோக்கு கூட்டுறவுச் சங்க கேட்போர் கூடத்தில்
நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.

இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் சிவராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலர் டியூ குணசேகர, கட்சியின் உபதலைவரும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு  அமைச்சருமான சந்திரசிறி கஜதீர, நேபாள அரசின் முன்னாள் பிரதமரும், நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் சிரேஷ்ட தலைவருமான தோழர் மாதேவ் குமார் நேபாள், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் செயலாளர் மாவை சேனாதிராஜா, பத்மநாபா-ஈ.பி.ஆர்.எல்.எவ் பொதுச்செயலர் தி.சிறீதரன் புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோரும், கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டக்குழு உறுப்பினர்களும் பெருமளவிலான பொதுமக்களும் பங்கேற்றிருந்தனர்.

இந்நிகழ்வில் நேபாள முன்னாநாள் பிரதமரும், நோபாள கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவருமான தோழர் மாதேவ் குமார் நேபாள் மற்றும் தோழர் டியூ குணசேகர ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.

இதன்போது பல்வேறு கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X