2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

150 வருட சேவையில் 3,107 பொலிஸார் பலி

Menaka Mookandi   / 2014 மார்ச் 21 , மு.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா


தமது சகோதர மக்களின் பாதுகாப்பு மற்றும் சமாதானத்தை பாதுகாக்கும் முகமாக 150 வருட கால பொலிஸ் சேவையில் மரணித்த பொலிஸ் உத்தியோகஸ்;தர்களின் எண்ணிக்கை 3,107 ஆகும் என யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் றொஹான் டயஸ் இன்று (21) தெரிவித்தார்.

150ஆவது பொலிஸ் வீரர் தினம் யாழ். பொது நூலகத்திற்கு முன்பாக இன்று (21) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு றொஹான் டயஸ் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

'உயிர் நீத்தவர்களில், பிரதி பொலிஸ் அதிபர் ஒருவரும், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் 4 பேரும், பொலிஸ் அத்தியட்சகர்கள் 8 பேரும், உதவிப்பொலிஸ் அத்தியட்சகர்கள் 16பேரும், பிரதான பொலிஸ் பரிசோதகர்கள் 23பேரும், பொலிஸ் பரிசோதகர்கள் 94 பேரும், உதவிப்பொலிஸ் பரிசோதகர்கள் 189பேரும், சாஜன் மேயர் 02 பேரும், பொலிஸ் சாஜன்கள் 172பேரும், மேலும் பொலிஸ் கொஸ்தாபல் 2413 பேரும், பி.இ.டி.யினர் 160பேரும், டபிள்யூ.பி.சி.யினர் 15 பேரும், பொலிஸ் சாஜன் சாரதி 10பேரும் இன்றை தினத்தில் நினைவு கூரப்படுகின்றனர். இவர்களில் 15 பெண் பொலிஸ் உத்தியோகஸ்தர்களும் அடங்குகின்றனர்.

30 வருட காலமாக நடந்த சிவில் யுத்தம் காரணமாக இறந்த பொலிஸ் வீரர்களின் எண்ணிக்கை 2,594 ஆகும். கடமையில் இருக்கும் போது அகால மரணமடைந்த பொலிஸ் வீரர்களை நினைவு கூறும் நிகழ்வு ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம் 21ஆம் திகதி இலங்கை பொலிஸ் திணைக்களத்தினால் சிறப்பாக அனுஷ;டிக்கப்படுகின்றது.

1864 ஆம் ஆண்டு பங்குனி மாதம் 21ஆம் திகதி மத்திய மலைநாட்டில் கேகாலை பிரதேசத்தில் உதுவன் மலை அடிவாரத்தில் சரதியல் என்னும் குற்றவாளியை கைது செய்யச் சென்ற போது அவனுடைய சகபாடியாகிய மம்மலே மரிக்கார் என்பவரால் சுடப்பட்டு மரணமடைந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் என்ற வகையில் பொலிஸ் கொஸ்தாபல் சபான் இறந்த தினத்தை நினைவுகூரும் முகமாக இந்த நிகழ்வு நிகழ்த்தப்படுகின்றது.

தமது சகோதர மக்களின் பாதுகாப்பு மற்றும் சமாதானத்தை பாதுகாக்கும் முகமாக ஒரு சகோதரனுக்கு செய்யக்கூடிய ஒரு தியாகம் என்றால் அது உயிர்த்தியாகமாகும்.

இந்த உத்தியோகஸ்தர்கள் தமது உயிரைப் பணயம் வைத்தது தங்களது சொந்த தேவைகளுக்காக அல்ல. பொதுவாக எங்களது நாட்டு மக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காகும்.

இந்த உத்தியோகத்தர்கள் இவ்வாறு உயிர்த்தியாகம் செய்யாதிருந்தால் இன்றைய தினம் அனைத்து இலங்கையர்களும் அனுபவிக்கின்ற சமாதானத்தின் சுவையை இவ்வளவு இலகுவாக அனுபவித்திருக்க முடியாது.

அவர்களுடைய நாளைய பொழுதை எங்களுடைய இன்றைய பொழுதுக்காக அர்ப்பணித்து பெற்றுத்தந்த சாமானத்தைப் பாதுகாப்பது உங்களிற்கும் பொலிஸ் திணைக்களத்திற்கும் இருக்கின்ற ஒரு பிராதான பொறுப்பாகும்' என அவர் மேலும் தெரிவித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .