2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

யாழ். எழுவை தீவில் சிசுவின் சடலம் மீட்பு

Super User   / 2011 ஜூலை 08 , மு.ப. 05:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். எழுவை தீவு பகுதியிலுள்ள பற்றைக்குள் இருந்து பிறந்து மூன்று நாட்களான சிசுவின் சடலம் இன்று வெள்ளிக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சிசு துணிகளினால் சுற்றப்பட்டு பற்றைக்குள் வீசி எறியப்பட்டுள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார் குறிப்பிட்டனர்.

சிசுவின் சடலம் தொடர்பாக அப்பகுதி மக்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதுடன் குறித்த சிசுவின் தாயை தேடிவருவதாகவும் ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

இறந்த சிசுவின் சடலம் தற்போது ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.


  Comments - 0

  • siraj maligaikadu Saturday, 09 July 2011 04:03 PM

    என்ன கொடும சார். இது இது மாதிரியான தாய்மாரும் இருக்காங்கள். ...... இந்த சில கொடூரமனவர்களால் உண்மையான தாய்மைக்கும் கெட்ட பெயர்.
    அல்லாஹ்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X