2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

யாழ். வைத்தியசாலையின் கட்டிட இரும்பு பொருட்கள் கடத்தல்; இருவர் கைது

Menaka Mookandi   / 2011 செப்டெம்பர் 26 , மு.ப. 09:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ்.போதனா வைத்தியசாலையில் கட்டிட வேலையில் ஈடுபட்ட தொழிலாளி அங்குள்ள இரும்புப் பொருட்களை முச்சக்கர வண்டியொன்றில் கடத்திய போது சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று திங்கட்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் யாழ்.போதனா வைத்தியசாலையில் இருந்து கட்டிட இரும்புப் பொருட்களை கடத்திய போது யாழ். பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது திட்டமிட்ட செயல் எனவும் தென்பகுதியைச் சேர்ந்த ஏ.ஜி.சோமரட்ண மற்றும் முச்சக்கரவண்டியின் சாரதியான என்.சிவாகரன் ஆகியோரே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படுள்ளனர் என்றும் இந்த இரும்புக் கடத்தலில் பயன்படுத்தப்பட்ட முச்சக்கரவண்டியும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .