Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Suganthini Ratnam / 2011 ஒக்டோபர் 08 , மு.ப. 11:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். மாவட்டத்தில் ஏற்கெனவே வாக்காளர்களாக பதிவு செய்யப்பட்டவர்களின் பெயர்கள் 2010 ஆண்டு வாக்காளர் இடாப்பிலிருந்து விடுபட்டுள்ளது. இதனால் யாழ். மக்கள் மீண்டும் தங்களது பெயர்களை வாக்காளர்களாக பதிவு செய்யுமாறு யாழ். மாவட்ட நாடளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார்
யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இன்று சனிக்கிழமை வாக்காளர் பதிவுகள் தொடர்பாக கபே அமைப்பினரினால் விளக்கமளிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
யாழ். மாவட்டத்தில் வாக்களிக்கும் உரிமையுடையவர்களின் பெயர்கள் வாக்காளர் இடாப்பிலிருந்து விடுபட்டுள்ளது. அத்தோடு வெளிநாடுகளிலுள்ளவர்களின் பெயர் விபரங்களை அவர்களின் உறவினர்கள் அல்லது அவர்களின் பெற்றோர்கள் வாக்காளர்களாக பதியுமாறும் வெளிநாடுகளில் தற்காலிகமாக வேலை வாய்ப்புக்காக சென்றர்களின் பெயர்களையும் பதியுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
எதிர்வரும் 15ஆம் திகதியுடன் வாக்காளர் பதிவு முடிவடைவதால் உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாக்காளர் பற்றிய விபரங்கள் அடங்கிய விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து யாழ். மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளரிடம் அல்லது கிராம சேவையாளர்களிடம் ஒப்படைக்குமாறும் சுரேஷ் பிரேமச்சந்திரன் கேட்டுள்ளார்
நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், கபே அமைப்பின் பிரதிநிதி இசுறு, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதேச சபைகளின் தலைவர்கள், தவிசாளர்கள், உறுப்பினர்களெனப் பலர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
18 May 2025