Super User / 2011 டிசெம்பர் 11 , பி.ப. 05:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(கவிசுகி)
உணர்வு ரீதியாக முன்னாள் போராளிகளை சமூகத்தில் ஏற்றுக் கொள்ளுங்கள் அவர்களைத் தனிமைப்படுத்த வேண்டாம் எனவும் எமது நாட்டின் பொருளாதார வளத்தை கட்டியெருப்புவதற்காக முன்னாள் போராளிகள் பயிற்றப்பட்டுள்ளார்கள் என புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர தெரிவித்துள்ளார்
யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை முன்னாள் போராளிகளை விடுதலை செய்து அவர்களுக்கான சுய தொழில் ஊக்குவிப்பு காசோலை வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
46 முன்னாள் போராளிகள் இன்று விடுதலை செய்யப்பட்டனர். அதில் 5 பெண்களும் 41 ஆண்களும் உள்ளடங்குகின்றனர். மீண்டும் சமூகத்தோடு இணைத்து அவர்களின் வாழ்வியலில் முன்னேற்றுவதற்கான சுயதொழில் ஊக்குவிப்பு காசோலைகளும் வழங்கப்பட்டது
'எந்த சந்தர்ப்பத்திலும் முன்னாளள் போராளிகளை நாங்கள் தனிமைப்படுத்த மாட்டோம் அவர்களின் எதிர்கால வாழ்வுக்காக என்றும் அவர்களுக்கு உறுதுணையாக இருப்போம்.
எமது நாட்டினுடைய பொருளாதார வளர்சியில் இவர்களின் பங்கு முக்கியம் பெறுகிறது. அரசியல் ரீதியாகவும் இனரீதியாகவும் செயற்பட்டு அவர்களின் மனங்களில் மாற்றுக்கருத்தை விதைத்து அழவுப்பாதைக்கு இட்டுச் செல்ல வேண்டாம்' எனவும் அவர் மேலும் கூறினார்.
இதேவேளை புனர்வாழ்வு ஆணையாளர் சந்தன ராஜகுரு உரையாற்றுகையில் '12 ஆயிரம் போராளிகள் எம்மிடம் சரணடைந்தார்கள் அவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்தோடு 10 ஆயிரத்தி 300 பேரை நாங்கள் விடுதலை செய்துள்ளோம். இந்த விடுதலையோடு சேர்த்து இது 32 வது தடவையாக முன்னாள் போராளிகளை விடுதலை செய்துள்ளோம்
யாழில் உள்ள தெல்லிப்பளை புனர்வாழ்வு நிலையத்தை முடிவிட்டு அங்கு தொழில் பயிற்சிக் கல்லூரி விரைவில் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம் 'என்றார்.
இந்த நிகழ்வில் புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் திஸநாயக்க, ஈபிடிபி நாடாளுமன்ற உறுப்பினர்களான மு.சந்திர குமார், சில்வேஸ்திரி அலன்ரின், யாழ்.மாவட்ட அரச அதிபர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

.jpg)
.jpg)
.jpg)
2 hours ago
2 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
7 hours ago