2025 மே 17, சனிக்கிழமை

கீரிமலை மயானத்தை பாவனைக்கு விடக் கோரி சடலத்துடன் ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2011 டிசெம்பர் 27 , மு.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ந.பரமேஸ்வரன்)

வலிகாமம் வடக்கிலுள்ள கீரிமலை மயானத்தை பொதுமக்கள் பாவனைக்கு விடுமாறு கோரி கீரிமலைச் சந்தியில் பொதுமக்கள் இன்று செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டுள்ளனர்.

மரணமடைந்த ஒருவரின் சடலத்தை தாங்கிக்கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள அம்மக்கள் மயானத்தை தமது பாவனைக்காக விடுமாறு கோருகின்றனர்.

கீரிமலை கடந்த 20 வருடகாலமாக உயர்பாதுகாப்பு வலயமாக இருந்தது. இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் இப்பகுதியில் பொதுமக்கள் மீள்குடியேற அனுமதிக்கப்பட்டிருந்தனர். எனினும், கீரிமலையின் கடற்கரையோரத்தை அண்டிய பிரதேசத்தில் மக்கள் மீள்குடியேற அனுமதிக்கப்படவில்லையென்பதுடன், கீரிமலை மயானமும் கடற்படையினரின் கட்டுப்பாட்டிலுள்ளது.  இந்த நிலையிலேயே கீரிமலை மயானத்தை பாவனைக்கு விடுமாறு பொதுமக்கள் கோரிவருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .