2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

கொடுப்பனவு வழங்குமாறு வலி. கிழக்கு பிரதேச சபை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Menaka Mookandi   / 2012 ஒக்டோபர் 30 , பி.ப. 01:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே.பிரசாத்)

மாதாந்தக் கொடுப்பனவு வழங்கப்படாமையைக் கண்டித்து வலி.கிழக்கு பிரதேச சபையில் கடமையாற்றும் ஊழியர்கள் இன்று செவ்வாய்கிழமை பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

பிரதேச சபைக்கென புதிதாக நியமனம் வழங்கப்பட்ட ஊழியர்களுக்கு இம்மாதக் கொடுப்பனவு நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பிரதேச சபையில் கடமையாற்றும் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் இழுபறிநிலை காணப்படுகின்றது.

இதனால்  தமது கொடுப்பனவை வழங்குமாறு வலியுறுத்தி பிரதேச சபையில் கடமையாற்றும் ஊழியர்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

வலிகாமம் கிழக்கு பிரதேச சபைச் செயலாளரின் முறையற்ற நடவடிக்கை காரணமாக தமது கொடுப்பனவு தடைப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

போராட்டத்தின் முடிவில் பிரதேச சபைத் தவிசாளர் அ.உதயகுமாரிடம் வடபிராந்திய ஐக்கிய தொழிலாளர் சங்கம் மகஜர் ஒன்றும் கையளித்துள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X