2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

பிள்ளைகளை விடுதலை செய்யுமாறு யாழ். கட்டளைத் தளபதியிடம் பெற்றோர் கோரிக்கை

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 21 , பி.ப. 01:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


(சுமித்தி)

கைது செய்யப்பட்டு வெலிக்கந்த புனர்வாழ்வு முகாமில் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வரும் தமது பிள்ளைகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி பல்கலைக்கழக மாணவர்களின் பெற்றோர்கள் கண்ணீர் மல்க யாழ். மாவட்ட கட்டளைத் தளபதியிடம் வேண்டுகோள் விடுத்தனர்.

யாழ். பல்கலைக்கழக நிர்வாகத்தினர் மற்றும் பெற்றோர்களுக்கிடையிலான கலந்துரையாடல் இன்று பலாலி படைத் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலின் போது, 'தமது பிள்ளைகள் கல்வி கற்ற பல்கலைக்கழகத்திற்கு சென்றார்களே தவிர அழிந்து போனவர்களை பற்றி கதைப்பதற்கு அல்ல. அவர்களை விடுதலை செய்யுமாறும் பிள்ளைகளுக்கும் பயங்கரவாத்திற்கும் எந்த தொடர்புமில்லை' எனவும் பெற்றோர்கள் கூறினர்.

அதற்கு பதிலளித்த கட்டளைத் தளபதி, 'நானும் ஒரு தந்தை தான் ஆனால், பிள்ளைகள் இன்று வரை தாம் அழிக்கப்பட்டவர்களை நினைவுகூறுவோம் என்று சொல்லி வருகின்றார்கள். அந்த நிலைமையில் அவர்களுக்கு புனர்வாழ்வு அழிப்பதற்கு 8 மாதங்கள் கூட ஆகலாம். ஆனபடியினால், பிள்ளைகள் அவ்வாறான விடயங்களை கதைப்பதை நிறுத்த அவர்களுக்கு அறிவுறுத்துமாறு' கூறினார்.

'அவ்வாறான சந்தர்ப்பத்தில் பெற்றோர்கள் பிள்ளைகளில் அதிக கவனம் எடுக்க வேண்டுமென்றும், சில அரசியல்வாதிகள் மாணவர்களை தூண்டிவிட்டு தாம் ஒதுங்கி நிற்கின்றார்கள். அவர்களின் பிள்ளைகள் வெளிநாடுகளில் கல்வி கற்கின்றார்கள், சகல வசதிகளையும் பெறுகின்றார்கள். அவர்களின் பிள்ளைகள் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றார்களா?' என்றும் கேள்வி எழுப்பினார்.

கலாசார நிகழ்வுகளை நடத்துவதற்கு நாம் தடைவிதிக்க மாட்டோம். கலாசார நிகழ்வுகள் தான் நாட்டின் பெருமையை எடுத்துக் கூறுகின்றன. கலாச்சார நிகழ்வுகளுக்கு தடை விதிக்கவும் முடியாது. ஆனால், தடை செய்யப்பட்ட விடயங்களில் மாணவர்கள் ஈடுவதுவதாக நம்பகமான தகவல்கள் வந்த பின்னர் தான் மாணவர்களை கைதுசெய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

இராணுவம் கண்டவர்களையும் சுட்டுக்கொல்ல வேண்டிய தேவையில்லை. மாணவர்கள் இன்றைய காலத்தில் கல்வி செயற்பாடுகளை பார்க்க வேண்டுமே தவிர, பயங்கரவாதிகள் என அங்கீகரிக்கப்பட்டு அழிக்கப்பட்டவர்களை உருவாக்க எண்ணுவது பிழை' என்றும் அவர் கூட்டிக்காட்டினார்.

'பெற்றோர்களின் கவலைகள் தனக்கு புரிகின்றதாகவும், அந்தவகையில், மாணவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விரைவில் விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை தான் எடுப்பதாகவும்' அவர் பெற்றோர்களுக்கு உறுதியளித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X