2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

யாழ். விருப்பு வாக்குகள்; சி.வி.க்கு முதலிடம்

Super User   / 2013 செப்டெம்பர் 22 , மு.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். சொரூபன், சுமித்தி தங்கராசா

இலங்கை தமிழரசுக் கட்சியின் வட மாகாண முதலமைச்சர் வேட்பாளரான ஓய்வுபெற்ற நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் 132,255 அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்றுள்ளார்.

யாழ். மாவட்டத்தில் இருந்து வட மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்டவர்களின் விருப்பு வாக்குகள் மாவட்ட செயலகத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் இலங்கை தமிழரசு கட்சியின் சார்பாக சி.வி.விக்னேஸ்வரன் 132,255 அதிகூடிய விருப்பு வாக்குகளையும் அனந்தி சசிதரன் 87,870 விருப்பு வாக்குகளையும் தர்மலிங்கம் சித்தார்த்தன் 39,715 விருப்பு வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

அத்துடன் பாலச்சந்திரன் கஜதீபன் 23,669 விருப்பு வாக்குகளையும் இ.ஆர்னோல்ட் 26,888 விருப்பு வாக்குகளையும் கந்தையா சர்வனேஸ்வரன்  26,747 விருப்பு வாக்குகளையும் எம்.கே.சிவாஜிலிங்கம் 22,660 விருப்பு வாக்குகளையும் ஐங்கரநேசன் பொன்னுத்துரை 22,268 விருப்பு வாக்குகளையும் எஸ்.சுகிர்தன் 20,541 விருப்பு வாக்குகளையும் கே.சயந்தன் 20,179 விருப்பு வாக்குகளையும்  விந்தன் கனகரத்தினம் 16,463  விருப்பு வாக்குகளையும் ஏ.பரம்சோதி 16,359 விருப்பு வாக்குகளையும் கந்தையா சர்வேஸ்வரன் 14,761 விருப்பு வாக்குகளையும் வி.சிவநேசன் 13,479 விருப்பு வாக்குகளையும் பெற்றுள்ளனர்.'

இதேவேளை, ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பாக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் கமலலேந்திரன் 13,632 விருப்பு வாக்குகளையும், அங்கஜன் இராமநாதன் 10,034 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .