2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

விவசாயிகளுக்கு உர மானியம் வழங்க ஏற்பாடு

Super User   / 2013 செப்டெம்பர் 23 , மு.ப. 08:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ். மாவட்ட விவசாயிகளுக்கு 28 ஆயிரம் ஏக்கர் நெற் பயிர்ச்செய்கைக்கான உர மானியங்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என கமநல சேவைகள் திணைக்கள ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் தெரிவித்தார்.

இந்த உர மானியங்கள் யாழ். மாவட்டத்தில் உள்ள 15 கமநல சேவைகள் திணைக்களத்தில் தற்போது களஞ்சியப்படுத்தப்பட்டு வருகின்றதாகவும் அவர் கூறினார்.

அந்த வகையில், சாவகச்சேரி பகுதியில் 6,400 ஏக்கர்,  கைதடி 4,150 ஏக்கர், நல்லூர் 727 ஏக்கர், வேலணை 420 ஏக்கர், புங்குடுதீவு 175 ஏக்கர், தொல்புரம் 3210 ஏக்கர், கீரிமலை 740 ஏக்கர், உடுவில் 590 ஏக்கர்,  புத்தூர் 1100 ஏக்கர், உரும்பிராய் 1170 ஏக்கர், புலோலி 500 ஏக்கர், அம்பன் 1480 ஏக்கர், காரைநகர் 1100 ஏக்கர், சண்லிப்பாய் 2550 ஏக்கர், கரவெட்டி 3600 ஏக்கருக்கும் வழங்கப்படவுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .