2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

அமைச்சர் பதவிக்கான விண்ணப்பங்களை தரவும்: இரா. சம்பந்தன்

Kogilavani   / 2013 ஒக்டோபர் 03 , மு.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

வடமாகாண அமைச்சர் தெரிவில் இழுபறி நிலவுவதால், அமைச்சர் பதவிக்கான விண்ணப்பங்களை தருமாறு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் உயர்மட்டங்களுக்கிடையிலான கலந்துரையாடல் புதன்கிழமை (2) இரவு கொழும்பிலுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தின் போது, அமைச்சர்களை நியமிப்பது குறித்து ஆராயப்பட்ட வேளையில், இலங்கை தமிழரசு கட்சி முக்கிய அமைச்சுக்களான கல்வி மற்றும் சுகாதார அமைச்சுக்களை தருமாறு தலைவரிடம் கோரிக்கை விடுத்திருந்தது.

இக்கோரிக்கைகளை ஏனைய கட்சி தலைவர்கள் ஏற்க மறுத்ததைத் தொடர்ந்து, அமைச்சுப் பதவிகளை கோருபவர்கள் தமக்கான விண்ணப்பப் படிவங்களை தருமாறு உறுப்பினர்களுக்கு இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, அமைச்சர் தெரிவு குறித்த கலந்துரையாடலை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நாளை வெள்ளிக்கிழமை வரை ஒத்திவைத்துள்ளார்.

  Comments - 0

  • VALLARASU.COM Thursday, 03 October 2013 02:53 PM

    ஆஹா... நான் நம்பவில்லையே உங்களுக்கும் இப்படி ஒரு பதவி ஆசை வரும் என்று...

    Reply : 0       0

    R.F.Maria Dineshan Thursday, 03 October 2013 03:07 PM

    ஆரம்பிச்சுட்டாங்கையா!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .