2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

யாழ். விபத்தில் படுகாயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 03 , பி.ப. 03:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

யாழ்.அளவெட்டியில் கடந்த 30 ஆம் திகதியன்று இடம்பெற்ற மோட்டார் சைக்கிள்கள் விபத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி இன்று மாலை உயிரிழந்தார்.

கடந்த 30 ஆம் திகதி அளவெட்டி அழகொல்லைப் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி அருகிலிருந்த மதகுடன் அடிபட்டு படுகாயமடைந்தவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

சிகிச்சை பெற்று வந்த அளவெட்டி கணேசபுரத்தினைச் சேர்ந்த தங்கவடிவேல் உதயசங்கர் (வயது – 21) என்ற நபர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .