2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

பஸ் வண்டி மீது கல்வீச்சு

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 24 , மு.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கனகரத்தினம் கனகராஜ்


கொழும்பிலிருந்து பருத்தித்துறை நோக்கி வந்துகொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்த பஸ் வண்டியொன்றின் மீது கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொழும்பிலிருந்து புறப்பட்ட மேற்படி பஸ் வண்டி  நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை  அதிகாலை 2.15 மணிக்கு மதவாச்சி, ஹெக்கராவைப் பகுதியிலுள்ள உணவகம் ஒன்றிற்கு முன்பாக  தரித்து நின்றவேளையில் பற்றைக்குள் மறைந்திருந்தவர்களினால் இவ்வாறு கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மதவாச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .