2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

கிளிநொச்சியில் அனர்த்த முகாமைத்துவ கருத்தரங்கு

Super User   / 2013 நவம்பர் 24 , பி.ப. 12:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வி.தபேந்திரன்


அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான மூன்று நாள் கருத்தரங்கு இன்று ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்தது. கிளிநொச்சி கனகபுரத்திலுள்ள லீட்ஸ் நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் இந்த கருத்தரங்கு இடம்பெற்றது.

இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் கிளிநொச்சி மாவட்ட கிளை, கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் அனர்த்த முகாமைத்துவ பிரிவு, கரைச்சி பிரதேச செயலக அனர்த்த முகாமைத்துவ குழு ஆகியன இணைந்து இந்த செயலமர்வினை ஏற்பாடு செய்திருந்தது.

அனர்த்தங்களின் முன்னரான செயற்பாடுகள் மற்றும் அனர்த்தங்கள் ஏற்படுவதினை எவ்வாறு எதிர்கொள்ளுதல் என்பன தொடர்பாக இந்த கருத்தரங்கில் விரிவாக கலந்துரையாடப்பட்டன.

இந்த நிகழ்வில் கிளிநொச்சி வலய கல்வி பணிப்பாளர் கே.முருகவேல், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு  அதிகாரி பத்மநாதன் சுதர்சன்,  இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் கிளிநொச்சி கிளை தலைவர் எஸ்.தர்மரட்ணம், கனகபுரம் மகா வித்தியாலய அதிபர் எஸ்.சேதுபதி, கிளிநொச்சி  மாவட்டச்  செயலக அனர்த்த முகாமைத்துவ பிரிவு  உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .