2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

அழகுசாதன நிலையத்தில் கொள்ளை

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 25 , மு.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

யாழ். அரியாலை பாரதி வீதியிலுள்ள அழகுசாதன நிலையமொன்றில் 200,000 ரூபா பெறுமதியான பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன.

இந்த அழகு சாதன நிலையத்தின் உரிமையாளர் நேற்று ஞாயிற்றுக்கிழமை  காலை அழகுசாதன நிலையத்தை திறப்பதற்குச் சென்றபோது, அழகுசாதன நிலையத்தின் முன் கதவு உடைக்கப்பட்டு அங்கிருந்த அழகுசாதனைப் பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், நேற்றுமுன்தினம் சனிக்கிழமை  இரவு இடம்பெற்றுள்ள இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் யாழ். பொலிஸ் நிலையத்தில்
மேற்படி அழகுசாதன நிலையத்தின் உரிமையாளர் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .