2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

குழந்தையை கொலை செய்த தந்தைக்கு விளக்கமறியல்

Super User   / 2013 நவம்பர் 25 , பி.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

தனது ஒன்றரை வயது ஆண் குழந்தையை அடித்துக் கொலை செய்த தந்தை, 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த உத்தரவினை யாழ். நீதவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. யாழ். அரியாலை, பூம்புகார் பகுதியைச் சேர்ந்த சீலன் டிலக்ஷன் என்ற குழந்தையே தந்தையினால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பிரதேசத்தினை கணவன் மற்றும் மனைவி ஆகியோருக்கு இடையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின்போது, கணவன் தனது மனைவியையும் ஒன்றரை வயது குழந்தையையும் அடித்துள்ளார்.

இதன்போது, பலமாக அடிபட்ட குழந்தை ஆபத்தான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தது.  இருந்தும் மேற்படி குழந்தை சிகிச்சை பலனில்லாமல் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தது.

இது தொடர்பாக தந்தையைக் கைது செய்த பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவு பொலிஸார் மேற்படி நபரை யாழ். நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். இதன்போதே குறித்த நபரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .