2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

வடமாகாண விவசாய அபிவிருத்தியில் பங்கேற்குமாறு புலமையாளர்களுக்கு அழைப்பு

Menaka Mookandi   / 2013 நவம்பர் 29 , பி.ப. 12:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமாகாண விவசாய அபிவிருத்தியில் பங்கேற்குமாறும் நிபுணத்துவ ஆலோசனைகளைப் பெறும் பொருட்டும் சிந்தனைக்குழாம் ஒன்றையும் ஆலோசனைச்சபை ஒன்றையும் அமைக்க இருப்பதாக வடமாகாண அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பொ.ஐங்கரநேசன் ஊடகக்குறிப்பொன்றை இன்று வெள்ளிக்கிழமை (29) வெளியிட்டுள்ளார். மேற்படி ஊடகக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

விவசாயம், கமநலசேவைகள், கால்நடைவளர்ப்பு, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றுப்புறச்சூழல் ஆகிய துறைகளை நவீனமுறையில் மேம்படுத்துவதற்கும் அத்துறைகளில் வடமாகாணத்தைத் தன்னிறைவு அடையச்செய்வதற்கும் அறிஞர்களின் பங்களிப்பு அவசியமாகும்.

அந்தவகையில் எமது அமைச்சுக்குத் தேவையான நிபுணத்துவ ஆலோசனைகளைப் பெறும் பொருட்டுத் தாயகம், தமிழகம், மற்றும் புகலிட நாடுகளில் வாழும் துறைசார் அறிஞர்களை உள்ளடக்கிய சிந்தனைக்குழாம் ஒன்றினை அமைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இக்குழாமில் இடம்பெறுபவர்கள் இணையவழித் தொடர்பாடலின் ஊடாகத் தமது ஆலோசனைகளை எமக்கு வழங்க முடியும். அத்தோடு நாம் காலத்துக்குக் காலம் நேரில் கூடிக் கலந்தாலோசிக்கும் நோக்கில் ஆலோசனைச்சபை ஒன்றையும் அமைக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்றும் மேற்படி செயற்பாடுகள் மூலம் இடம்பெற்று தமது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் வழங்க விரும்பும் பற்றாளர்கள் அனைவரையும் npminiagri@gmail.com என்னும் மின்னஞ்சலில் உடனடியாகத் தொடர்பு கொள்ளுமாறும் அந்த ஊடகக்குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .