2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

சடலத்தை அடையாளம் காட்டுமாறு வேண்டுகோள்

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 01 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ். போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள ஆண் ஒருவரின் சடலத்தை அடையாளம் காட்டுமாறு யாழ்ப்பாண பொலிஸார் இன்று ஞாயிற்றுக்கிழமை (01) கேட்டுக்கொண்டுள்ளனர்.

யாழ். போதனா வைத்தியசாலையில் அடிகாயங்களுடன் கடந்த மாதம் 28ஆம் திகதி  அனுமதிக்கப்பட்ட மேற்படி நபர், மறுநாள் 29ஆம் திகதி பிற்பகல் 5.15 மணிக்கு உயிரிழந்திருந்தார்.

50 முதல் 60 வயதுவரை மதிக்கத்தக்கவரான இவர், தனது பெயர் மாதவன் எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், இவரது உறவினர்கள் அல்லது நண்பர்கள்  யாராவது இருந்தால் வந்து சடலத்தை அடையாளம் காட்டுமாறும் பொலிஸார் கேட்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .