2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

சைவசமய பரிசில் நாள்

Kogilavani   / 2014 மார்ச் 07 , மு.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.விஜயவாசகன்

தென்மராட்சி கல்வி வலயம் நடத்தும் 2014 ஆம் ஆண்டிற்கான சைவசமய பரிசில் நாள் சாவகச்சேரி மகளிர் கல்லூரியில்  8 ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

சைவ சமய ஆசிரிய ஆலோசகர் இ.இராலிங்கம் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண சபை உறுப்பினர் பசுபதி அரியரத்தினம், சிறப்பு விருந்தினர்களாக தென்மராட்சி கல்வி வலயப் பிரதிக்கல்விப் பணிப்பாளர் சி.சிவநாதன், ஓய்வு நிலை அதிபர் த.கந்தையா, ஓய்வு நிலை அதிபர் சா.நகுலேஸ்வரன், சாவகச்சேரி மகளிர் கல்லூரி அதிபர் ல.முகுந்தன் ஆகியோர்
கலந்துகொள்ளவுள்ளனர்.

அத்துடன் கௌரவ விருந்தினர்களாக சாவகச்சேரி பலநோக்குக் கூட்டுறவுச்சங்கத்தின் முகாமையாளர் செ.மகேஸ்வரன், சாவகச்சேரி கைத்தொழில் வணிக மன்றத்தலைவர் வ.ஸ்ரீபிரகாஷ், முறைசாராக்கல்வி ஓய்வு நிலை உதவிக்கல்விப்பணிப்பாளர் தா.பாலசுந்தரம் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதன்போது, உசன் இராமநாதன் மகா வித்தியாலய மாணவர்களின் நடனம், மீசாலை விக்னேஷ்வரா மகா வித்தியாலய மாணவர்களின் நடனம், கைதடி முத்துகுமராசுவாமி மகா வித்தியாலய ஆசிரியர்களின் வில்லுப்பாட்டு ஆகிய நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .