2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

அபிவிருத்திகள் தொடர்பான பொதுக்கூட்டம்

Kogilavani   / 2014 மார்ச் 07 , மு.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.விஜயவாசகன்

சாவகச்சேரி நகரசபைக்குட்பட்ட 1 ஆம் வட்டாரத்தில் அபிவிருத்திகளை முன்னெடுப்பதற்கான பொதுக்கூட்டம் எதிர்வரும் 9 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு மீசாலை மேற்கு மலைமகள் சனசமூக நிலைய மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக சாவகச்சேரி நகரசபை உறுப்பினர் அ.பாலமயூரன் வெள்ளிக்கிழமை (07) தெரிவித்தார்.

இக்கூட்டம் வடமாகாணசபை உறுப்பினர் கேசவன் சஜந்தன் தலைமையில் நடைபெறவுள்ளது.

குறித்த பகுதி கிராம அபிவிருத்திச்சங்கம், விவசாய சம்மேளனம், மாதர் சங்கம், விளையாட்டுக்கழகங்கள், சனசமூக நிலையங்கள், ஆலய திருப்பணிச் சபைகள், உற்பத்தி, விவசாய, கைத்தொழில் தொடர்புடைய அமைப்புக்களுடன் இணைந்து இக்கூட்டம் நடைபெறவுள்ளது.

இதன்போது, குறித்த வட்டாரத்தின் தேவைகள் குறைபாடுகள் இனங்காணப்பட்டு அதற்கான அபிவிருத்தி திட்டங்கள் வகுக்கப்பட்டு வடமாகாண சபை ஊடாக நிதிக்கொடை அளிக்கக்கூடிய முகவர் நிறுவனங்களுக்கு சமர்ப்பித்தல், வடமாகாண சபைக்கு கிடைக்கும் வெளிநாட்டு நிதிகளில் இருந்து அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்தல், நாடாளுமன்ற உறுப்பினர்கள் வடமாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோரின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்ட நிதி மூலம் எல்லா பிரதேசங்களுக்குரிய தேவைகள் பரவலாக கிடைக்கும் வகையில் முன்மொழிவுகளை செய்தல்,

கடந்தகால யுத்தத்தினால் ஏற்பட்ட பாதிப்புக்களின் காரணமாக பொருளாதார நிலையில் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்;படுத்துவதற்கான திட்டங்களை வகுப்பதற்கு பயனாளிகளை இனம் காணுதல், விசேட உதவி தேவைப்படும் மற்றும் நலிவடைந்தோர் தொடர்பில் திட்டங்களை வரைதல், பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் வாழ்வாதரத்தை மேம்படுத்துதல் தொடர்பான விடயங்கள்  ஆராயப்படவுள்ளதாக நகரசபை உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .