2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

சிறுவர் சந்தையில் வெற்றியீட்டியவர்களுக்கான பரிசில் வழங்கல்

Kogilavani   / 2014 மார்ச் 14 , மு.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வி.விஜயவாசகன்


செலான் வங்கியின் சாவகச்சேரி கிளையின் ஏற்பாட்டில் சாவகச்சேரி பிரதேச ஆரம்பப் பாடசாலைகளில் முன்னெடுக்கப்பட்டு வந்த சிறுவர் சந்தை நிகழ்வில் வெற்றியீட்டியவர்களுக்கான பரிசில்கள் வழங்கும் நிகழ்வு வியாழக்கிழமை (13) மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரியில் நடைபெற்றது.

இந்தச் சிறுவர் சந்தை விழா சாவகச்சேரி இந்து ஆரம்பப் பாடசாலையில் கடந்த செவ்வாய்க்கிழமையும் (11), சாவகச்சேரி டிறிபேக் கல்லூரியில் புதன்கிழமையும்; (12), மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரியில் வியாழக்கிழமையும்(13) நடைபெற்றிருந்தன.

மேற்படி மூன்று பாடசாலைகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கே பரிசில்கள் வழங்கப்பட்டன.

விற்பனை அடிப்படையில் சிறப்பாகச் செயற்பட்ட 22 மாணவர்களுக்கும், வியாபார தந்திரோபாயங்களை பின்பற்றிய 3 மாணவர்களுக்கும், சிறப்பாக வியாபாரிகளுக்குரிய வேடங்கள் பூண்ட 4 மாணவர்களுக்கும் இதன்போது பரிசில்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் சாவகச்சேரி கோட்டக்கல்விப் பணிப்பாளர் கு.சிவதாசன், கல்லூரி அதிபர் த.அம்பலவானர், இலங்கை வலைப்பந்தாட்ட அணியினைச் சேர்ந்த சி.தர்ஜினி ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களுக்கான பரிசில்களை வழங்கினார்கள்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .