2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

மோட்டார் சைக்கிளில் தவறி வீழ்ந்தவர் படுகாயம்

Super User   / 2014 மார்ச் 20 , மு.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா
கணவருடன் மோட்டார் சைக்கிளில் பின்னால் இருந்து பயணித்த பெண்ணொருவர் தவறி வீழ்ந்து படுகாயமடைந்து புதன்கிழமை (19) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தெல்லிப்பளை சந்தியில் புதன்கிழமை (19) பிற்பகல்; இடம்பெற்ற இவ்விபத்தில் தெல்லிப்பளை சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் கடமையாற்றும் செந்தில்குமரன் ரஜனி (28) என்ற மருத்துவ மாதுவே படுகாயமடைந்தார்.

முதலில் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர், தொடர்ந்து மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .