2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

இலங்கநாதனின் சடலத்தினைப் பொறுப்பேற்றுகுமாறு கோரிக்கை

Kogilavani   / 2014 மார்ச் 21 , மு.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஐ.நேசமணி

யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் உயிரிழந்த ஆனைக்கோட்டை உயரப்புலத்தினைச் சேர்ந்த எஸ்.இலங்கநாதன் (67) என்பவரது சடலத்தினை உரியவர்கள் வந்து பொறுப்பேற்குமாறு யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் திருமதி பவானி பசுபதிராஜா வெள்ளிக்கிழமை (21) தெரிவித்தார்.

மேற்படி நபர் கடந்த கடந்த 18 ஆம் திகதி காலை 11.15 மணியளவில் யாழ்.போதனா வைத்தியசாலையின் 8ஆம் விடுதியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி அன்றைய தினமே உயிரிழந்திருந்தார்.

இவரது உறவினர்கள் எவரும் இதுவரையில் வருகை தந்து சடலத்தினைப் பொறுப்பேற்கவில்லையெனவும், உடனடியாக வைத்தியசாலை நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டு சடலத்தினைப் பொறுப்பேற்றுக்கொள்ளுமாறும் பணிப்பாளர் மேலும் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .