2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

பெண்ணைத் தாக்கியவருக்கு விளக்கமறியல்

Kanagaraj   / 2014 ஏப்ரல் 11 , பி.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

கி.பகவான்

கொடிகாமம் கெற்கேலி மேற்குப் பகுதியினைச் சேர்ந்த இளம்பெண்ணொருவர் மீது தாக்குதல் மேற்கொண்டதாக கூறப்படும் சந்தேகநபரை எதிர்வரும் 23 ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் செ.கணபதிப்பிள்ளை வெள்ளிக்கிழமை (11) உத்தரவிட்டார்.

குறித்த பெண்ணினை வியாழக்கிழமை (10) வீதியில் வைத்து தாக்குதல் மேற்படி நபர் தாக்குதல் மேற்கொண்டுள்ளார். 

அந்த பெண்ணினால் செய்யப்பட்ட முறைப்பாட்டினையடுத்து குறித்த நபர் வியாழக்கிழமை (10) மாலையே கைது செய்யப்பட்டு நீதிமன்றில் வெள்ளிக்கிழமை (11) ஆஜர்ப்படுத்திய வேளையிலேயே நீதவான் மேற்படி உத்தரவினைப் பிறப்பித்தார்.

அந்த பெண் தன்னைக் காதலித்து ஏமாற்றிவிட்டார் என்பதினாலேயே அவர்  மீது தாக்குதல் மேற்கொண்டேன் எனப் மூன்று பிள்ளைகளின் தந்தையாரான சந்தேகநபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை உசன் பகுதியிலுள்ள வீடொன்றில் கமரா மற்றும் 2000 ரூபா பணம் என்பவற்றை நேற்று வியாழக்கிழமை (10) திருடிய நபரை கைது செய்த பொலிஸார்  அவரை வெள்ளிக்கிழமை  (11) நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தியவேளையில் நீதவான் அந்த நபரையும் 23 ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .