2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

யாழ். கடற்பரப்பில் கடலட்டை, சங்குகள் பிடிக்க தடை

Menaka Mookandi   / 2014 மே 26 , பி.ப. 08:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

யாழ்.குடாநாட்டின் கடற்பரப்பில் கடலட்டை மற்றும் சங்குகள் பிடிப்பதற்கு தடை உத்தரவு, இந்தாண்டு தொடக்கத்திலிருந்து அமுலில் இருப்பதாக யாழ். மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறையின் உதவிப்பணிப்பாளர் நடராசா கணேசமூர்த்தி தெரிவித்தார்.

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் இணைத் தலைமையில் யாழ். மாவட்டச் செயலகத்தில் நேற்று திங்கட்கிழமை (26) இடம்பெற்றது.

இதன்போது, வடமராட்சி கிழக்கு சுண்டிக்குளம் மற்றும் கட்டைக்காடு ஆகிய பகுதிகளில் கடலட்டை மற்றும் சங்குகள் பிடிக்கப்படுவதாக மற்றும் அனுமதிக்கப்படாத மீன்பிடி முறைகளும் பயன்படுத்தப்படுவதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற சிவஞானம் சிறிதரன் குற்றஞ்சாட்டியிருந்தார். இதற்குப் பதிலளிக்கையிலே கணேசமூர்த்தி இவ்வாறு தெரிவித்தார்.

யாழ்.மாவட்டத்தில் கடலட்டை மற்றும் சங்குகள் பிடிப்பதற்கு தடை அமுலில் இருக்கின்றது. அத்துடன், அந்தத் தடையானது இந்த வருட ஆரம்பத்திலிருந்து கடுமையாக அமுலில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

அத்துடன், தடை செய்யப்பட்ட உபகரணங்களைப் பயன்படுத்தி மீன் பிடிப்பதும் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .