2025 ஜூலை 05, சனிக்கிழமை

பெண் கொலை; ஐவர் கைது

A.P.Mathan   / 2014 ஜூன் 14 , பி.ப. 06:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.றொசாந்த், செல்வநாயகம் கபிலன்
 
யாழ். சுதுமலை வடக்கில் இன்று சனிக்கிழமை (14) அதிகாலை பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு, அவர் அணிந்திருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என ஐவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
 
மானிப்பாய் பிரதேசத்தினைச் சேர்ந்த ஐவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 
குமாரலிங்கம் பத்மாவதி (56) என்ற பெண் கொழும்பில் வசித்த நிலையில், சுதுமலை அம்மன் ஆலயத் திருவிழாவிற்காக யாழ்ப்பாணம் வருகை தந்து, சுதுமலை வடக்கிலுள்ள தனது சொந்த வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் பெண்ணுடன் தங்கியுள்ளார்.
 
நேற்று (13) இரவு ஆலயத்திருவிழா முடிந்து வீட்டில் இவர்கள் இருவரும் உறங்கிக் கொண்டிருந்த போது, இன்று (14) அதிகாலை வேளையில் வீட்டின் கூரையினைப் பிரித்து உள்நுழைந்து, வீட்டிலிருந்த இரண்டு பெண்களையும் கை, கால்களை கட்டிவிட்டு அவர்கள் அணிந்திருந்த மற்றும் வீட்டிலிருந்த நகைகளைத் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
 
இந்நிலையில் வீட்டு உரிமையாளரான (பத்மாவதி) பெண்ணின் வாயினை துணியால் கட்டியமையினால் அவர் மூச்சுத் திணறி இறந்துள்ளார்.
 
இது தொடர்பிலே குறித்த ஐவரும் கைது கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .