2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

நால்வரை கடித்த நாய் தலை அனுப்பி வைப்பு

Kanagaraj   / 2014 ஒக்டோபர் 26 , மு.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-    நா.நவரத்தினராசா

தெல்லிப்பழை பகுதியில் நால்வரை கடித்த பின்னர் உயிரிழந்த நாயினுடைய தலை பரிசோதனைகளுக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெல்லிப்பழை சுகாதார வைத்தியதிகாரி ப.நந்தகுமார் ஞாயிற்றுக்கிழமை (26) கூறினார்.

தெல்லிப்பழை சந்தியில் கடந்த வெள்ளிக்கிழமை (24) நடமாடித்திரிந்த மேற்படி நாய் வீதியால் சென்ற நால்வரை கடித்துள்ளது.
கடியுண்டவர்கள் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றனர்.

இதனையடுத்து. நாயை பிடித்து கட்டி வைத்தபோது நாய் திடீரென வெள்ளிக்கிழமை (24) மாலை இறந்தது.

இதனையடுத்து நாய் இறந்ததிற்காக காரணத்தை கண்டறியவும், நாயினுடைய நோய் தன்மையை அறியவும் அதன் தலை வெட்டப்பட்டு கொழும்பிலுள்ள ஆய்வுகூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.  



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .