2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

தாதியர்களை உருவாக்க யாழ்.வணிகர் சங்கம் நடவடிக்கை

Menaka Mookandi   / 2014 ஒக்டோபர் 29 , மு.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பொ.சோபிகா

யாழ். மாவட்டத்தில் தனியார் வைத்தியசாலையில் பணியாற்றுவதற்கு 10 பெண்பிள்ளைகளுக்கு மருத்துவ தாதி பயிற்சிகளை வழங்கி வேலைவாய்பையும் ஏற்படுத்தி கொடுப்பதற்கு யாழ் வணிகர் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக வணிகர் சங்கத்தலைவர் ஆர்.ஜெயசேகரம் புதன்கிழமை (29) தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ் மாவட்டத்தில் வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள 10 பெண் பிள்ளைகள் தெரிவுசெய்யப்பட்டு 6 மாத கால பயிற்சியை வழங்கி பின்னர் தனியார் வைத்தியசாலைகளில் வேலைவாய்பையும் வழங்கவுள்ளோம். இதற்கான பயிற்சிகள் வியாழக்கிழமை (30) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இந்த திட்டத்திற்கு முதற்கட்ட நிதியாக ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதி குறித்த பயிற்சி நிறுவனத்திற்கு வழங்கியுள்ளோம்.

அத்துடன் யாழ் மாவட்டத்திலுள்ள ஒவ்வெரு பிரதேச செயலகங்களிலும் இருந்து வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட 15 பேர் தெரிவுசெய்யப்பட்டு சிறுகைத்தொழிலுக்கு தலா 10,000 ரூபாய் நிதி அடுத்த மாதம் வழங்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .