2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

மீனவர்களின் விடுதலை தொடர்பில் யாழ். ஆயருக்கு மகஜர்

Gavitha   / 2014 நவம்பர் 02 , மு.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


-பொ.சோபிகா

இலங்கையைச் சேர்ந்த 3 மீனவர்களுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கிய மரணதண்டனையை குறைக்குமாறு, மீனவர்களின் உறவினர்கள் மகஜர் ஒன்றை ஞாயிற்றுக்கிழமை (02) யாழ். ஆயர் இல்லத்தில் வழங்கினார்கள்.

யாழ். மறை மாவட்ட ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம், ஆயர் இல்லத்தில் இல்லாத காரணத்தால், குரு முதல்வர் யஸ்ரீன் ஞானப்பிரகாசம் மகஜரை பெற்றுக்கொண்டார்.

போதைப்பொருள் கடத்தல் வழக்கில், இலங்கை மற்றும் இந்திய மீனவர்கள் 8 பேருக்கு கடந்த மாதம் 30ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றத்தால் மரணதண்டனை விதிக்கப்பட்டது.

இத்தீர்ப்பை குறைக்கும்படியே 3 மீனவர்களின் உறவினர்கள் மகஜர் கையளித்துள்ளனர்.

குறித்த மகஜரில், 'யாழ் மாவட்டத்தை சேர்ந்த குருநகர், மண்டைதீவு பகுதியை சேர்ந்த 3 மீனவர்கள் கடந்த 2011ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 28ஆம் திகதி கடலுக்கு மீன்பிடிக்க சென்றவேளை, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டனர் என்ற சந்தேகத்தின் பேரில், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

மீனவர்கள் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

மூன்று வருடகாலமும் அவர்களை வெளியே கொண்டுவர பல முயற்சிகள் எடுத்ததுடன், அதற்காக பல இலட்சம் ரூபாய் செலவளித்தும் அவர்களை விடுவிக்க முடியவில்லை.

இந்நிலையில் மேல் நீதிமன்றத்தால் மீனவர்களுக்கு கடந்த மாதம் 30ஆம் திகதி மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கொடுக்கப்பட்ட தீர்ப்பால் எமது குடும்பங்களும் பிள்ளைகளும் மிகவும் கஷ்டத்தில் இருக்கின்றோம். தண்டனை விதிக்கப்பட்ட மூன்று மீனவர்களுக்கும் சிறு பிள்ளைகள் இருப்பதால், எமது பரிதாப நிலையை கருத்திற்கொண்டு மரணதண்டனை தீர்ப்பை குறைத்து அவர்கள் எம்மோடு சேர்ந்து வாழ ஆவன செய்யும் படி கேட்டுக்கொள்கிறோம்' என அந்த மகஜரில் குறிப்பிடப்பட்டிருந்தது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .