2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

வரட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம்

Menaka Mookandi   / 2014 நவம்பர் 03 , மு.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

அனர்த்த முகாமைத்துவ அமைச்சால் முல்லைத்தீவு, மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவில் வரட்சியால் பாதிக்கப்பட்ட 750 குடும்பங்களுக்கு வரட்சி நிவாரணமாக 45 இலட்சம் ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளதாக மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் ரி.பிருந்தாகரன் திங்கட்கிழமை (03) தெரிவித்தார்.

அந்நிதி ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 6 ஆயிரம் ரூபாய் என பிரித்து பயனாளிகளின் வங்கிக்கணக்கில் வைப்பிலிடப்பட்டுள்ளன. கடந்த காலங்களில் நிலவிய வரட்சி காரணமாக விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த குடும்பங்கள் பாதிப்புக்குள்ளாகியிருந்தனர்.

பாதிக்கப்பட்ட விவசாயிகள் தங்களுக்கு நிவாரணங்கள் பெற்றுத்தருமாறு பிரதேச செயலகத்தில் கோரிக்கைகள் முன்வைத்திருந்தனர். விவசாயிகளின் கோரிக்கை தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சிற்கு தெளிவுபடுத்தப்பட்டது அதன் பயனாக அமைச்சு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக 45 இலட்சம் ரூபாய் நிதியை வழங்கியிருந்தது.

அந்நிதி பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட கிராமஅலுவலர் பிரிவுகளாக பாண்டியன்குளம், கொல்விளாங்குளம், அம்பாள்புரம், சீராட்டிகுளம், மூன்று முறிப்பு, விநாயகாபுரம், பூவரசங்குளம், கரும்புலியான் குளம், பாலிநகர், வன்னிவிளாங்குளம், நட்டாங்கண்டல், ஒட்டறுத்தகுளம் ஆகிய 12 கிராமஅலுவலர் பிரிவுகளை சேர்ந்த 750 குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக பிரதேச செயலாளர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .