2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

ஆட்டை திருடியவர் கைது

Gavitha   / 2014 நவம்பர் 05 , மு.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-யோ.வித்தியா

யாழ்.மட்டுவில் பகுதியிலுள்ள வீடொன்றில் கட்டியிருந்த ஆடொன்றை திருடி, அதே பகுதியிலுள்ள ஆட்டிறைச்சி கடைக்கு விற்பனை செய்த சந்தேகநபர் ஒருவரை செவ்வாய்க்கிழமை (04) கைது செய்ததாக சாவகச்சேரி பொலிஸார் கூறினர்.

தனது வீட்டில் திங்கட்கிழமை (03) இரவு கட்டப்பட்டிருந்த 40 ஆயிரம் ரூபாய் பெறுமதியான ஆடு திருட்டுப் போய்விட்டது தொடர்பில், ஆட்டின் உரிமையாளர் செவ்வாய்க்கிழமை (04) சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தார்.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சந்தேகநபரை கைது செய்யப்பட்டதாக தெரிவித்தனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .