2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

கலைப்பாட பயிற்சி வகுப்புக்கள் ஆரம்பம்

Menaka Mookandi   / 2014 நவம்பர் 07 , பி.ப. 12:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்.இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் கலைப்பாட பயிற்சி வகுப்புக்கள் எதி;ர்வரும் டிசம்பர் மாதம் ஆரம்பமாகவுள்ளதாக யாழ்.இந்திய துணைத்தூதரக கொன்சலட் ஜெனரல் எஸ்.டி.மூர்த்தி வெள்ளிக்கிழமை (07) தெரிவித்தார்.

இந்த கலைப்பாட பயிற்சியில் கர்நாடக சங்கீதம் (வாய்ப்பாட்டு), யோகா, ஹிந்தி, வயலின் உள்ளிட்ட பாடநெறிகள் போதிக்கப்படவுள்ளன.

இந்த கலைப்பாட வகுப்புக்கள் இல.14, மருதடி வீதி, நல்லூர், யாழ்ப்பாணம் எனும் முகவரியிலுள்ள தூதரக வளாகத்தில் நடைபெறவுள்ளது.

மேற்படி பாடநெறிகளில் இணைந்து கொள்ள விரும்பும் மாணவர்கள தங்கள் விபரங்களை cgi.jaffna@gmail.com மின்னஞ்சலுக்கு அல்லது 021 2220503 என்ற தொலைநகல் இலக்கத்திற்கு தங்கள் விபரங்களை எதிர்வரும் 22ஆம் திகதிக்கு முன்னதாக அனுப்பமுடியும்.
விபரங்களை அனுப்பும் விண்ணப்பதாரிகள், தங்கள் பெயர், விபரம், இணையவுள்ள பாடநெறி என்பவற்றை குறிப்பிட்டு அனுப்பலாம்.

வகுப்புக்கள் வார நாட்களில் இடம்பெறும். பாடநெறிக்கான பதிவுக்கட்டணம் 250 ரூபாய் அறவிடப்படும் அதேவேளை, வகுப்புக்கான கட்டணம் அறவிடப்படமாட்டாது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .