Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2015 மார்ச் 24 , மு.ப. 09:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
வீதியால் சென்ற வயோதிபரை மோதி அவரின் உயிரிழப்புக்கு காரணமான மோட்டார் சைக்கிள் ஓட்டுநருக்கு 7,000 ரூபாய் அபராதமும் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு 1 இலட்சம் ரூபாய் நட்டஈடு வழங்குமாறும் மல்லாகம் மாவட்ட நீதவான் சின்னத்துரை சதீஸ்தரன் செவ்வாய்க்கிழமை (24) உத்தரவிட்டார்.
கந்தரோடை வீதியில் கடந்த ஜனவரி மாதம் இடம்பெற்ற விபத்தில், அதேயிடத்தைச் சேர்ந்த கௌசினன் டெனிசியஸ் (வயது 80) என்ற முதியவர் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் கடந்த வாரம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வந்த சுன்னாகம் போக்குவரத்து பொலிஸார், விபத்துக்கு காரணமான மோட்டார் சைக்கிள் ஓட்டுநரை கைது செய்தனர்.
இந்த விபத்து தொடர்பான வழக்கு செவ்வாய்க்கிழமை (24) நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது, இரு தரப்பினரும் தாங்கள் சமாதானமாக செல்வதாக நீதிமன்றத்தில் கூறினர். இதனையடுத்து, நீதவான் மேற்படி அபராதம் மற்றும் நட்டஈடு என்பவற்றை விதித்து தீர்ப்பளித்தார்.
2 hours ago
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
5 hours ago