2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி

Menaka Mookandi   / 2015 மார்ச் 24 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜெகநாதன்

உலக சுகாதார புற்றுநோய் தினத்தை மாகாண மட்டத்தில் கொண்டாடும் வகையில் யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் ஏற்பாட்டில் புற்நோய் விழிப்புணர்வு பேரணியொன்று, யாழ்ப்பாணத்தில் செவ்வாய்க்கிழமை (24) நடைபெற்றது.

பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் ஈ.தேவநேசன் தலைமையில் நடைபெற்ற இந்த பேரணி, சுகாதார சேவைகள் பணிமனையில் ஆரம்பமாகி, ஆஸ்பத்திரி வீதி, கே.கே.எஸ்.வீதி, ஸ்டான்லி வீதி, ஆரியகுளம் சந்தி, வேம்படிச் சந்தி, யாழ். மத்திய கல்லூரி வழியாக வீரசிங்கம் மண்டபத்தை சென்றடைந்தது.

வீரசிங்கம் மண்டபத்தில் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக வடமாகாண முதலமைச்சர் சி.விக்னேஸ்வரன் கலந்துகொண்டார். சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் ஆகியோரும் இதில் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X