Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2015 மார்ச் 25 , மு.ப. 05:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
சமுதாயம் சார் சீர்திருத்த திணைக்களத்தின் அலுவலகம், பருத்தித்துறை மாவட்ட நீதிமன்றத்தின் கட்டடத் தொகுதியில் புதன்கிழமை(25) காலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
சமுதாயம் சார் சீர்திருத்த திணைக்களத்தின் பணிப்பாளர் திருமதி டி.சி.சன்னசூரிய இந்த அலுவலகத்தை திறந்து வைத்தார்.
பருத்தித்துறை நீதிமன்றத்தில் கடந்த 1 ½ வருடங்களாக சமுதாயம் சார் சீர்திருத்த பிரிவு இயங்கி வருகின்றபோதும் அதற்கான அலுவலகம் இல்லாத நிலை காணப்பட்டது. அதனை நிவர்த்தி செய்யும் வகையில் இந்த அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.
பருத்தித்துறை மாவட்ட நீதிமன்றத்தால் கடந்த 2014ஆம் ஆண்டு 55 பேருக்கு சமுதாயம் சார் சீர்திருத்த பணி செய்யுமாறு உத்தரவிடப்பட்டது.
சிறுகுற்றங்கள் செய்பவர்கள் மீண்டும் அந்தக் குற்றங்களை செய்யாமல் இருப்பதற்கும், அவர்களை சமூகப் பணிகளில் ஈடுபடுத்தும் நோக்கிலும் இந்த சமுதாயம் சார் சீர்திருத்த பணிகள் குற்றவாளிகளுக்கு வழங்கப்படுகின்றது.
பொது இடங்களை துப்புரவு செய்தல், ஆன்மீகத்தில் ஈடுபடுத்துதல் தொழில்வாய்ப்பு ஒன்று தேடிக்கொள்ள ஆலோசனை வழங்கல் உள்ளிட்ட பல விடயங்கள் இந்த சமுதாயம் சார் சீர்திருத்த நடவடிக்கையின் மூலம் முன்னெடுக்கப்படுகின்றது.
4 hours ago
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
7 hours ago