2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

திருடிய மாடுகளுடன் இருவர் கைது

Menaka Mookandi   / 2015 மார்ச் 26 , மு.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

4 மாடுகளைக் கொண்டு சென்ற இரண்டு சந்தேகநபர்களை புதன்கிழமை (25) இரவு புத்தூர் சந்தியில் கைது செய்ததாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.

பூநாறி மரத்தடிப் பகுதியை சேர்ந்த சந்தேகநபர்கள் இருவரும், மட்டுவில் பகுதியிலுள்ள வீட்டிலிருந்த இரண்டு பசுமாடுகள் மற்றும் இரண்டு கன்று ஆகியவற்றை திருடி கொக்குவில் பகுதிக்கு சென்று கொண்டிருக்கும் போதே கைது செய்யப்பட்டனர்.

சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X