2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

வாழைக்குலை வியாபாரி மீது வாள்வெட்டு

Suganthini Ratnam   / 2015 மார்ச் 29 , மு.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ். புத்தூர் நவக்கிரியைச்  சேர்ந்த வாழைக்குலை வியாபாரி  மீது      மூன்று பேரைக் கொண்ட கும்பல்  மேற்கொண்ட  வாள்வெட்டில் படுகாயமடைந்த அவ்வியாபாரி அச்சுவேலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை (29) தெரிவித்தனர்.

சனிக்கிழமை (28) இரவு  இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் மருதயன் புஸ்பராசா (வயது 50) என்பவரே படுகாயமடைந்தார்.
வாழைக்குலை கொள்வனவு செய்பவர்கள் போன்று, இவரது வீட்டுக்கு வந்த மூன்று பேர்,  அவரை வாளால் வெட்டிவிட்டு  தப்பிச்சென்றனர்  

இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X