2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

போலி நகையினை அடகு வைத்த நால்வருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை

George   / 2015 மார்ச் 29 , மு.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

நெல்லியடி நகரப்பகுதியில் போலி நகையினை அடகு வைத்து பணம் பெற முயன்ற ஆனைக்கோட்டை பகுதியினை சேர்ந்த சந்தேகநபர்கள் நால்வருக்கு 5 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட மூன்று மாத சிறைத்தண்டனை விதித்து பருத்தித்துறை நீதவான் மாணிக்கவாசகர் கணேசராஜா, வெள்ளிக்கிழமை (27) உத்தரவிட்டார். 

அத்துடன் சந்தேக நபர்கள் நால்வரின் கைவிரல் அடையாளத்தினை பெறுமாறு பதிவாளருக்கு உத்தரவிட்டார்.
சந்தேகநபர்கள், கடந்த 2013ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம், நெல்லியடி நகரப்பகுதியில் உள்ள அரச வங்கி ஒன்றில் போலி நகையினை அடகு வைத்து பணம் பெற முயன்றுள்ளனர்.

இது தொடர்பில் வங்கி முகாமையாளர் நெல்லியடி பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து நால்வரும் கைது செய்யபட்டிருந்தனர்.

இரண்டு வருடங்களாக மேற்படி வழக்கு, பருத்தித்துறை நீதிமன்றில் நடைபெற்றது.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை (27) வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சந்தேக நபர்கள் தமது குற்றங்களை ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து நீதவான் மேற்படி தீர்ப்பினை வழங்கினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X