2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

தீவகங்களுக்கு பிரதமர் விஜயம்

George   / 2015 மார்ச் 29 , மு.ப. 07:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த் 

வடக்குக்கு 3 நாள் விஜயம் மேற்கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சனிக்கிழமை (28) நெடுந்தீவு மற்றும் நயினாதீவு ஆகிய பகுதிகளுக்கு விஜயம் செய்தார்.

நெடுந்தீவுக்கு விஜயம் செய்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் நடைபெற்ற கர்ப்பிணித் தாய்மாருக்கான சத்துணவு வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு 43 கர்ப்பிணி தாய்மாருக்கு உணவு பொதிகளை வழங்கினார்.

நயினாதீவு நாகவிகாரை மற்றும் நயினை நாகபூசனி அம்மன் ஆலயத்துக்கு சென்ற பிரதமர் அங்கு வழிபாடு செய்தார்.

இதன்போது, இந்நிகழ்வுகளில், மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் இந்துகலாசார அமைச்சர் டி.எம்சுவாமிநாதன், மகளிர் விவகார அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X